Tuesday, May 10, 2016

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு; விண்ணப்ப பதிவு துவக்கம்

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில்தனித்தேர்வராக பங்கேற்பவர்களுக்குஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி,சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள டயட் மையத்தில் துவங்கியுள்ளது. 

தொடக்கக்கல்வி ஆசிரியர் பணிக்கானஇரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள்,ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில்தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள்வரும் தேர்வில் தேர்வெழுததனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணிசேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி (டயட்) மையத்தில்நேற்று துவங்கியது. 
இதில்விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்இணையதளத்தில் 218.248.44.57/diet என டைப் செய்து,விண்ணப்ப படிவத்தையும்அதற்கான அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்ஏற்கனவே தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகலினை இணைத்துடயட் மையத்தில் சமர்பிக்க வேண்டும். அங்கு இதற்கென பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம்,புகைப்படத்துடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். 
தேர்வுக்கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய்மதிப்பெண் சான்றிதழுக்கு, 100 ரூபாய்பதிவு மற்றும் சேவைக்கட்டணம், 15 ரூபாய்ஆன்லைன் பதிவுக்கட்டணம், 50 ரூபாய் என,நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நேரில் பணமாக செலுத்தலாம். விண்ணப்பங்கள் மே, 14ம் தேதி மாலை, 5 மணி வரைமட்டுமே பெறப்படும். 
தகுதியற்ற விண்ணப்பங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தகவலைசேலம் டயட் மைய முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment